துபாயில் குடும்பவியல் மாநாடு
துபாய் : துபாய் அல்மனார் இஸ்லாமிக் சென்டரில் குடும்பவியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கணவன் மனைவி உரிமைகளும் கடமைகளும் என்ற தலைப்பில் ஷேக்.அன்சார் ஹுசைன் ஃபிர்தௌஸியும், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பில் ஷேக்.முர்ஷித் அப்பாஸியும், இரத்த உறவைப் பேணுவோம் என்ற தலைப்பில் ஷேக்.முபாரக் மதனியும் உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.- நமது செய்தியாளர் காஹிலா