குவைத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
குவைத் : குவைத் இந்திய தூதரகத்தில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம் நடப்பது வழக்கம் ஆகும். நவம்பர் மாதத்துக்கான குறைதீர்க்கும் முகாம் 21 ஆம் தேதி நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமை வகித்தார். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பாஸ்போர்ட், சம்பளம் வழங்காதது, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக புகார்களைத் தெரிவித்தனர். ஒவ்வொரு புகாரின் அடிப்படையிலும் அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர். _ நமது செய்தியாளர் காஹிலா