உள்ளூர் செய்திகள்

பஹ்ரைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் தலைமை வகித்தார். தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சம்பளம் வழங்கப்படாதது, கல்வி, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தெரிவித்து தேவையான ஆலோசனைகளை பெற்றனர். இந்திய தூதரகத்தின் பல்வேறு துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !