உள்ளூர் செய்திகள்

மஸ்கட் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்

மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். பாஸ்போர்ட் பெற தாமதமாதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தொழிலாளர்கள் குறைகளை தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தூதரக அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !