லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சார்பில் தொழிலாளர்க்கு பழங்கள், பழச்சாறு, தண்ணீர்
பஹ்ரைன்: லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக நல உதவி இயக்கத்தின் ' வெப்பத்தை வெல்லுங்கள்' முயற்சியின் ஒரு பகுதியாக, பஹ்ரைனில் ஈசா டவுன் மற்றும் ரிஃபா பகுதியைச் சுற்றியுள்ள குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு பழங்கள், பழச்சாறு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் பிரதிநிதிகள் ஃபசல் உர் ரஹ்மான் மற்றும் ரவூஃப் ஆகியோர் விநியோகத்தில் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா