உள்ளூர் செய்திகள்

அபுதாபி இந்து கோவிலில் மத்திய பிரதேச முதல்வர்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வருகை புரிந்த மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தனது மனைவியுடன் அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு கோவிலின் நிர்வாகி மஹந்த் சுவாமி மஹாராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கோவிலின் கட்டிடக்கலையை பார்வையிட்டு வியந்து பாராட்டினார். மேலும் அங்கு நடந்த குரு பூர்ணிமா சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்