உள்ளூர் செய்திகள்

தாயகம் திரும்ப தமிழருக்கு உதவிய மதீனா தமிழ்ச் சங்க உறுப்பினர்

அதிராம்பட்டினத்தை சேர்ந்த அபூபக்கர் மதீனாவில் பணிபுரிந்து வந்தார். சில சட்ட சிக்கல்கள் காரணமாக அவர் இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து, மதீனா தமிழ்ச் சங்கத்தில் உள்ள அஷ்ரப்பை அவர் அணுகினார். அஷ்ரப், இந்திய தூதரகம் (ஜெத்தா), மதீனாவில் உள்ள சவுதி அரசின் பல்வேறு அலுவலகங்களுடன் தொடர்புகொண்டு சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் செய்து, அபூபக்கருக்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்து, அவரை தாயகத்துக்கு ஜூலை 22 ஆம் தேதி, மதீனாவிலிருந்து அனுப்பி வைத்தார். - நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்