ரியாத்தில் மாம்பழ திருவிழா
ரியாத்: சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் மாம்பழ திருவிழா தொடங்கியது. இந்திய வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் நடந்த இந்த திருவிழாவை இந்திய தூதரக அதிகாரி அபு மதின் ஜார்ஜ் தொடங்கி வைத்தார். ரியாத் வர்த்தக சபை அலுவலர்கள், லூலூ குழும அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா