உள்ளூர் செய்திகள்

ஷார்ஜாவில் தியாகச்சுடர் திப்பு சுல்தான் நூல் அறிமுக நிகழ்ச்சி

ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது எழுதிய 'தியாகச்சுடர் திப்பு சுல்தான்' என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.பல்கலைக்கழக அலுவலர் தமீம் அஞ்சும் அறிமுகம் செய்து வெளியிட இலங்கை சிலோஜினி பெற்றுக் கொண்டார்.அப்போது பேசிய தமீம் அஞ்சும், இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீரர் என்ற பெருமைக்குரிய திப்பு சுல்தான் வரலாறு இளைஞர்கள் எழுதில் தெரிந்து கொள்ள உதவும் வகையில் வெளியிட்ட நூலாசிரியரின் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்த நூல் பள்ளிக்கூடம் மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டியது அவசியம் ஆகும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் முகீத், ரேஷ்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன.ர்- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !