ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் நாவல் வெளியீடு
ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் நாவல் வெளியீடுஷார்ஜா: பத்திரிகையாளர், வெளியுறவு நிபுணர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளருமான மன்சூர் பல்லூரின் முதல் நாவல் “அரபியுடே அம்மா” (“அரபியின் தாய்”) ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியின் நிறைவுநாளில் வெளியிடப்பட்டது.கேரளாவுடன் நீண்ட காலம் உள்வாங்கிய பாசப்பிணைப்பை பேணிக்கொண்டு வரும் சவூதி அரேபியாவை சேர்ந்த முஹம்மது பின் ஹமீம் நூலை வெளியிட துபாயில் மருத்துவ சேவை மற்றும் மனிதநேய நடவடிக்கைகளால் பிரசித்திபெற்ற டாக்டர் அஸ்லம் சலீம் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.முஹம்மது பின் ஹமீம் , கேரளாவுடனும் மலையாளிகளுடனும் தமக்குள்ள உறவை அன்புடன் நினைவுகூர்ந்து பேசினார். அவர், தனது நெருங்கிய நண்பரும் மறைந்த மனிதநேய சேவகருமான வழக்கறிஞர் சி.கே. மேனன் கேரளாவின் முன்னாள் முதல்வர் ஊம்மன் சாண்டியையும் நினைவுகூர்ந்து உரையாற்றினார்.மனித நேயத்தின் இந்த உள்ளத்துடிக்கும் நினைவுகள், புத்தக வெளியீட்டு விழாவை நாவலின் உணர்வை பிரதிபலிக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாற்றின. மன்சூர் பல்லூரின் முன்பு வெளியான “21 ஆம் நூற்றாண்டு யாருடையது?” என்ற நூல் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் பெற்றிருந்தது. “அரபியுடே அம்மா” அவரின் முதல் நாவலாக வெளிவருவது மட்டுமன்றி, இந்தியாவின் முதல் AI திரைப்பட தயாரிப்பாளரின் இலக்கிய உலகத்திலான ஒரு முக்கிய நூல் ஆகவும் அமைந்துள்ளது.இந்த நாவல், ஒரு அரபு குடும்பத்தில், மலையாள வேலைக்காரி லக்ஷ்மியுடனும் உருவான அன்பையும் பாசத்தையும் ஆழமான உணர்ச்சியுடன் விவரிக்கிறது. நூலை பேப்பர் பப்ளிக்கா வெளியிட்டுள்ளது. மன்சூர் பல்லூருடன் பிணைப்பைக் கொண்டுள்ள அமீரகத்திலும் பிற வளைகுடா நாடுகளிலும் வாழும் பலர் விழாவில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.- ஷார்ஜாவில் இருந்து நமது தினமலர் வாசகர் இர்ஃபான்