உள்ளூர் செய்திகள்

மதீனாவில் தவித்த தமிழக ஹாஜிகளுக்கு உதவி புரிந்த NRT மதீனா அயலக அணி

மதினா வந்த 20 ஹாஜிகளுக்கு உணவு,இருப்பிடம்,ரிட்டர்ன் டிக்கெட் தராமல் ட்ராவல் நிறுவனத்தார் தலைமறைவு ஆகிவிட்டதாக மதீனா NRTIA விற்கு தகவல் கிடைத்தது.உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த NRTதுணை அமைப்பாளர் அபு இன்பன் மூலம் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு அனைவரும் தாயகம் திரும்பிச் சென்றனர். ஏர்போர்ட் செல்வதற்கு வாகன வசதி அயலக அணி சார்பில் வழங்கப்பட்டது. எம்பசி ஜமால் ஜாகீர் மூலமாக ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து பாஸ்போர்ட் பெறப்பட்டது. இதில் ஆரம்பம் தொட்டு இறுதி வரை மதினா அயலக அணி நிர்வாகிகள் குஜாமூதின், செங்கோட்டை ஹாஜிர் அலி மற்றும் டாக்சி சலாம் ஆகியோர் நிறைய உதவிகள் செய்தனர். இதற்கான முழு செலவையும் தனது சொந்த பணத்தை செலவு செய்து உதவிய அப்துல்லாவுக்கு ஹாஜிகள் நெஞ்சார்ந்த நன்றிகள் கூறி சென்றனர். - சவூதியிலிருந்து நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !