உள்ளூர் செய்திகள்

துபாயில் காயிதேமில்லத் பேரவை பொதுக்குழு கூட்டம்

துபாய்: அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுக்குழு கூட்டம் பேரவையின் தலைவர் திருப்பனந்தாள் முகம்மது தாஹா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக பேரவையின் துபாய் மண்டல துணைச் செயலாளர் லால்பேட்டை கிஃபாயத்துல்லா கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். துணைப் பொதுச் செயலாளர் வழுத்தூர் மக்கி பைசல் வரவேற்புரை ஆற்றினார் . பேரவையின் பொதுச் செயலாளர் இராமநாதபுரம் MSA.பரக்கத் அலி துவக்க உரையாற்றினார். பேரவைத் தலைவர் முகமது தாஹா இனி செய்யப்பட வேண்டிய பணிகளை பற்றியும் துணைத் தலைவர் கீழக்கரை மஹ்ரூப் காகா சமுதாயப் பணிகளைப் பற்றியும் அதனோடு மார்க்க பணிகளையும் செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியினை பேரவையின் துபாய் மண்டல செயலாளர் கீழக்கரை முகம்மது காமில் தொகுத்து வழங்கினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:. தமிழக அரசின் உயரிய விருதான தகைசால் தமிழர் விருதை பெறும் சமுதாய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதர் மொகிதீனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பாராட்டு விழா. அயலக தமிழர் நல வாரியத்தின் உறுப்பினராக பதிந்து கொள்ளும் வயது வரம்பை 55 லிருந்து 70 வயதாக உயர்த்த கோரிக்கை. சமூக நலப்பணிகளின் துபாய் மண்டல செயலாளராக கீழக்கரை முஹம்மது ராசிக் தேர்வு. இனி வருங்காலங்களில் அமீரக காயிதே மில்லத் பேரவையும், பிரவாசி லீக்கும் ஒருங்கிணைந்து சமூக பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஜமால் முகம்மது கல்லூரியின் பவள விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடிய கல்லூரி நிறுவனத்தாருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் பேரவையின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். தேசியத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத்தை அமீரகம் அழைத்து சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்வது. பேரவையின் உறுப்பினர்கள் சேர்க்கையை விரைவு படுத்துவது. தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரவாசி லீக் தலைமைக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு அதன் மாநில பிரதிநிதிகளோடு பேரவையின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஏற்பாடு செய்வது. இந்நிகழ்ச்சியில் மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் அமீரக ஊடகத்துறை செயலாளராகவும், சமூக நலப்பணிகளின் துபாய் மண்டல செயலாளராக கீழக்கரை முஹம்மது ராசிக் மற்றும் துணைச் செயலாளராக அய்யம்பேட்டை தர்வேஷ், அஜ்மான் மண்டல துணைச் செயலாளரக புளியங்குடி நசீப் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சார்ஜா மண்டல செயலாளர் அஞ்சுக்கோட்டை அப்துல் ரசாக் , கொள்கை பரப்பு செயலாளர் கவிஞர் வழுத்தூர் முகைதீன் பாஷா ,ஐடி விங் சீனியர் அட்வைசர் சுல்தான் இப்ராஹிம் , துபாய் மண்டல விழா குழு துணைச் செயலாளர் வேதாளை முகைதீன் ஆலிம் மற்றும் ஹோர்அல் அன்ஸ், அல் முத்தினா பகுதி துணைச் செயலாளர் வன்னாங்குண்டு தைபுல்லா, லால்பேட்டை அஹமதுல்லாஹ் , ஏர்வாடி முஹம்மது முகைதீன், நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான் நிசார் அஹமது முகம்மது ஹனிஃபா, ஆர்கிடெக்ட் முகமது அசாருதீன், ராஜா முஹம்மது, முகமது அலாவுதீன் , கீழக்கரை ரிபாத், சதாத் அலி, ஷாஜித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். சமீபத்தில் வஃபாத்தாகிவிட்ட பேரவையின் துணைத் தலைவர் கீழக்கரை எஸ் கே எஸ் ஹமீதுர் ரஹ்மானின் தந்தை சீனி முஹம்மது தண்டையாலின் மக்ஃபிரத்திற்காக துஆச் செய்யப்பட்டது. பேரவையின் பொருளாளர் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி நன்றி கூறினார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்