ஷார்ஜாவில் விஞ்ஞான, பொருளாதார கண்காட்சி
ஷார்ஜா: ஷார்ஜாவில் உள்ள அஸ்பம் இந்தியன் இண்டர்னேசனல் பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவியரின் விஞ்ஞான - பொருளாதார கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கூட முதல்வர் ஷீலா ஜார்ஜ் தலைமை வகித்தார். கண்காட்சியை தமிழக சமூக ஆர்வலர் எஸ்.எம். இதாயத்துல்லா, துபாய் என்.ஐ. மாடல் பள்ளிக்கூடத்தின் முன்னாள் மூத்த கல்வி அதிகாரி லியாக்கத் அலி ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சி அடுத்த நாற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு இன்றைய பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த நிகழ்ச்சியாகவே மிளிர்ந்தது. குறிப்பாக சூரிய ஒளியை பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தும் வழிமுறைகள், புதிய வேளாண் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை, தயாரிப்பு தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் என பல்வேறு வகையான தகவல்களும் இடம் பெற்றிருந்தன. அன்றாட செலவின்றி , கால விரையமின்றி, பசுமை , நவீன மஸ்ஜித்களை எதிர்காலத்தில் உருவாக்கும் மாணவர்களின் யுக்தி பலரையும் கவர்ந்தது. இதில் பள்ளிக்கூட மாணவர்களை ஈடுபடுத்தி, அவர்களின் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமீரக கோல்டன் விசா பெற்ற தமிழக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், தொழில் நுட்பவியலாளர் இராமநாதபுரம் அல்காப் மாலிக், துணை முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் பங்கேற்றனர். - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா