உள்ளூர் செய்திகள்

இஸ்ரேல் நூலகத்தில் இந்திய நூல்கள் பிரிவு

டெல் அவிவ் : இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் இந்திய கலாச்சார உறவு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பில் நெதன்யா முனிசிபல் நூலகத்துக்கு இந்திய நூல்களைக் கொண்ட பாரத் கார்னர் என்ற பிரிவு ஏற்பட்டு அதற்காக இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த நூல்களை இந்திய கலாச்சார உறவு மைய அதிகாரி நூலக அதிகாரியிடம் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட நூலக அதிகாரி இந்திய கலாச்சார உறவு மையத்துக்கு நன்றி தெரிவித்தார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !