உள்ளூர் செய்திகள்

ஷார்ஜா சபாரி பூங்கா கோடை விடுமுறைக்கு பின்னர் 23 ஆம் தேதி திறப்பு

ஷார்ஜா : ஷார்ஜா சபாரி பூங்கா கோடை விடுமுறைக்கு பின்னர் 23 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. ஷார்ஜாவின் அல் தைத் பகுதியில் அமைந்துள்ள அல் பிரிதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மிகப்பெரிய சபாரி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த சபாரி பூங்காவை கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பொதுமக்களுக்காக திறந்து வைத்தார். இந்த சார்ஜா சபாரி பூங்கா மொத்தம் 8 கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 120 வகையான 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்கினங்களும், 1 லட்சத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்காவில் காணப்படும் மரங்களும் வளர்க்கப்பட்டுள்ளன. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பல்வேறு பொழுது போக்கு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 23 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் இந்த சபாரி பூங்காவை பொதுமக்கள் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்