துபாயில் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா
துபாயில் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா; தகைசால் தமிழருக்கு பாராட்டு விழாதுபாய் : அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் துபாய் மில்லினியம் ஏர்போர்ட் ஹோட்டல் அரங்கில் சந்தனத் தமிழ் அறிஞர் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழாவும், தகைசால் தமிழருக்கு பாராட்டு விழாவும் பேரவை தலைவர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா தலைமையில் நடைபெற்றது.பேரவை பொருளாளர் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி இறைமறை வசனங்கள் ஓதி துவக்கி வைத்தார். பேரவை பொதுச் செயலாளர் ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரக்கத் அலி வரவேற்றார். அமீரக தொழிலதிபர்களின் கூட்டமைப்பான ராயல் டையமண்ட் குழுமத்தின் அங்கத்தினர்களான நோபில் குழுமங்களின் தலைவர் சாஹுல் ஹமீது, பிளாக் துலிப் முஹம்மது எஹ்யா, ஆலியா ஷேக் தாவூத் மரைக்காயர், ஈமான் தலைவர் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான், அல்லைடு மோட்டார்ஸ் கமால் , ஆரிஃபா குழுமங்களின் சேர்மன் சுல்தானுல் ஆரிஃபின், பவர் குழுமம் ஜாஹிர் ஹுஸைன், அல் நஜ்மா அல் ஃபரீதா டாக்டர் அப்துல் கலாம், டாப் ஸ்டார் பைரோஸ், ஷரீப், அய்மான் கல்லூரி தாளாளர் ஹபீபுல்லா, ஈமான் பொதுச் செயலாளர் யாசின், ஜெயந்திமாலா, அமீரக திமுக ஆசிப் மீரான், அமீரக காங்கிரஸ் தலைவர் அப்துல் மாலிக், அய்மான் சங்கம் சாஹூல் ஹமீது, ரைஸ் அமைப்பின் ஆல்பிரட் பெர்க்மேன், தமிழ் பெண்கள் சங்க பொதுச் செயலாளர் சானியோ, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி அனீஸ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி சிராஜுல் மில்லத்தின் மதிப்புமிக்க சேவைகளை போற்றி நூற்றாண்டு பிறந்த நாளை நினைவூட்டி பேசினார்.பேரவை கொள்கை பரப்புச் செயலாளர் வழுத்தூர் கவிஞர் முஹையத்தீன் பாட்ஷா தகைசால் தமிழரின் சேவையை புகழ்ந்து கவி பாடினார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் கே நவாஸ் கனி எம்.பி. முஸ்லிம் லீகின் ஆக்கப்பூர்வமான பணிகள், தலைவரின் அறிவார்ந்த வழிகாட்டல்கள் மற்றும் சிராஜுல் மில்லத் மீது தேசத் தலைவர்கள் கொண்டிருந்த அன்பை நினைவூட்டி பேசினார்.நவாஸ் கனி எம்.பி.க்கு பேரவை துணைத்தலைவர்கள் அபுதாஹிர் பைஜி , ஆவை அன்சாரி சால்வை அணிவித்து கௌரவித்தனர். சமுதாயத் தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியாக பேரவை துபாய் மண்டல செயலாளர் முஹமது காமில் நன்றி கூறினார். மார்க்கத்துறை செயலாளர் மௌலவி சுலைமான் மஹ்லரி துஆ ஓதினார்.தமிழகத்தில் உள்ள முஸ்லிம் லீகர்களும் சமுதாயப் புரவலர்களும், கல்வியாளர்களும், துபை மருத்துவ நிபுணர்களான டாக்டர் ஹக்கீம், டாக்டர் ஜக்கரிய்யா ,உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும், தோழமைக் கட்சிகளான மதிமுக, விசிக பிரமுகர்களும், ஜமாஅத் நிர்வாகிகளும் பங்கேற்ற இந்நிகழ்வை பேரவை நிர்வாகிகள் அப்துல் ஜமீல் ஜிஃப்ரி, அப்துல் ரசாக் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.பேரவை சார்பில் துணை பொதுச் செயலாளர் மக்கிபைசல் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தார். மின்னணு ஊடகத்துறை செயலாளர் சொக்கம்பட்டி முஹம்மது கபீர் ரிபாயி தலைமையிலான குழுவினர் ஒளிப்பதிவு, ஒளிபரப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தனர்.பேரவை நிர்வாகிகள் மக்கள் தொடர்பு செயலாளர் மேலக்காவேரி சாதிக் பாஷா , துணைச் செயலாளர் பசுபதி கோயில் சாதிக், ஆடுதுறை அப்துல் காதர், தேரா தமிழ் பஜார் பகுதி செயலாளர் பனைக்குளம் இப்ராஹிம், காத்ர மீரான் பைஜி, அய்யம்பேட்டை தர்வேஷ் , துணைச் செயலாளர் லால்பேட்டை நூருல் அமீன், திண்டுக்கள் ஜமால், அல் முத்தினா ஹோர்அல் ஹன்ஸ் பகுதி செயலாளர் வண்ணாங் குண்டு தைபுல்லா, ஏர்வாடி முஹம்மது முகைதீன், ஹம்தான் கரீம், கீழக்கரை ரிபாத், அய்யம்பேட்டை சுகைல் மில்லத் இஸ்மாயில் , சோனாப்பூர் கலீம், லால்பேட்டை முஷாகிர் , சம்சுல் ஹூதா , இராமநாதபுரம் ஹபீஸ் , புஹாரி, முஹம்மது ஆரிஃபின் , ஷாஜி, கைஃப், ராவுத்தர், உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.---துபாயில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா