உள்ளூர் செய்திகள்

துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி

துபாய்: துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அமீரக சுற்றுச்சூழல் குழுமம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்ச்சிக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். 'பிளாஸ்டிக் பாதிப்புக்கு முடிவு கட்டுவோம்' என்ற கருப்பொருளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஷேக் சலேம் பின் சுல்தான் பின் சகர் அல் காசிமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உபயோகித்த பேப்பர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், அலுமினிய கேன்கள், எலெக்ட்ரானிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை அதிகமாக வழங்கிய பள்ளிக்கூட மாணவ, மாணவியர், நிறுவனங்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !