குவைத் இந்திய முஸ்லிம் சங்கத்தின் சார்பில் ஹிஜ்ரி இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
குவைத்: குவைத் இந்திய முஸ்லிம் சங்கத்தின் சார்பில் ஹிஜ்ரி இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் சல்மியா பகுதியில் உள்ள ஹய்யா இப்ராஹிம் பள்ளிவாசலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மௌலவி மசூத் சஹாப் ஹிஜ்ரி தொடர்பான வரலாற்று சம்பவங்களை நினைவு கூர்ந்தார். மேலும் உர்தூ மொழியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வினை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியன் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா