உள்ளூர் செய்திகள்

தமிழக ஹாஜிகளுக்கு ஜித்தாவில் வரவேற்பு

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் கடந்த பல ஆண்டுகளாக தமிழக ஹாஜிகளுக்கு உதவும் தன்னார்வ சேவைகளை சிறப்பாக செய்து வருகிறது. 16/-5/-25 அன்று 844 ஹாஜிகளுடன் முதல் விமானம் சென்னையிலிருந்து இரவு 9.15 க்கு ஜித்தா வந்தடைந்தது. ஜித்தா விமான நிலையத்தில் ஹாஜிகளை வரவேற்றது மட்டுமின்றி வயதான ஹாஜிகளை மின்தூக்கியில் அழைத்து வந்து இரயில் நிலையத்தில் சேர்த்தது, பாஸ்போர்ட் தொலைந்து போன ஹாஜியின் பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்தது, லக்கேஜ் தவற விட்ட ஹாஜிகளுக்கு அவற்றை தேடிப்பிடித்து கிடைக்க ஏற்பாடு செய்தது, ஹாஜிகளுக்கு உரிய இரயில் மற்றும் ரூம் நம்பர்படி அமர வழி காட்டியது, ஹாஜிகள் தவறவிட்ட லக்கேஜ்களை அவர்களது இரயிலில் முறைப்படி ஏற்றிவிட்டது, விமானத்தில் தவறவிட்ட லக்கேஜ்களை லக்கேஜ் ஏற்றக்கூடிய வாகனத்தில் சென்று ஏற்றிவிட்டது, மொபைல் தொலைந்த ஹாஜிக்கு அது கிடைப்பதற்கு வழிவகை செய்து கொடுத்தது போன்ற பல் வேறு உதவிகளை அதிகாலை 2.30 மணி வரை செய்தனர். மேலும புனித மக்கா நகரில் நமது ஹாஜிகள் இறங்கும் போது IWF மக்கா கிளை நிர்வாகிகள் அவர்களை வரவேற்றும் வழிகாட்டியும் செய்து அவர்களது இருப்பிடங்களில் கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டார்கள். இறை பொருத்தத்தை நாடி செய்த இந்த தன்னார்வ சேவையில் IWF ஜித்தா மண்டல தலைவர் காரைக்கால் அப்துல் மஜீத், செயலாளர் பொறியாளர் கீழை இர்ஃபான், துணை தலைவர் முகவை அப்துல் சமது, துணை செயலாளர் பொறியாளர் பனங்காட்டூர் அப்துல் ஹலீம் மற்றும் அவரது துணைவியார், சமூக நலத்துறை செயலாளர் பரமகுடி செல்வகனி, பலதியா கிளை பொருளாளர் சோழசக்கரநல்லூர் ஃபஜருல்லாஹ், பேர்ணாபட் முஹம்மது ஷுஐப், பொட்டல்புதூர் சாதிக், லால்குடி மன்சூர், அக்தர் மற்றும் கீழக்கரை சீனி காக்கா, புனித மக்கா மாநகர் IWF நிர்வாகிகள் காரைக்கால் கபீர், சென்னை முஹம்மது அஜிஸுல்லா, ஊட்டி தாரிக், பெரம்பலூர் அஷ்ரப், அருப்புக்கோட்டை முஹம்மது நபி, கடையநல்லூர் ஷமிம், தென்காசி ஹக், யாசின் ஆகியோர் தம்மை ஈடுபடுத்தி கொண்டனர். - இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF), ஜித்தா மேற்கு மண்டலம், சவூதி அரேபியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்