உள்ளூர் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் கற்றல் கல்வி மையம் உலக சாதனை நிகழ்வு

ஐக்கிய அரபு அமீரகம் கற்றல் கல்வி மையம் உலக சாதனை நிகழ்வு ஐக்கிய அரபு அமீரகத்தில் 11 வருடத்திற்கு மேல், தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொடர்பு மையமாகவும் ஐக்கிய அரபு அமீரக அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையமாகவும் திகழும் முன்னணி கல்வி நிறுவனம் கற்றல் கல்வி மேலாண்மை மையம். இந்த கல்வி மையத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கல்வியை கற்று வருகின்றனர்.மேலும் தமிழை தாய்மொழியாக கொள்ளாத குழந்தைகளும் பயில்வது மகிழ்ச்சியான செய்தி. இந்தக் கல்வி மையத்தை செயல்முறை கல்வியாக கலாச்சார இணைப்பை ஊக்குவிக்கும் பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு உயர்தர தமிழ் கல்வி தரவேண்டும் என்று வழிநடத்துபவர் தோற்றுநர் மற்றும் தலைவர், முனைவர் மு.ரா. ஸ்ரீ ரோகிணி. தற்போது 44 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 16 2025 மதியம் ஒரு மணிக்கு கற்றல் கல்வி மையத்தின் ஆசிரியர்கள் குழந்தைகள் என 30-க்கும் மேற்பட்ட தனித்தனி புத்தகங்கள் கையெழுத்துப் பிரதியில் வெளியிட்டு உலக அளவில் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் எழுத்து பயிற்சியும் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேல் வாசிப்பு மற்றும் படைப்புத்திறன் வளர்ப்பு பயிற்சியையும் கற்றுக்கொண்டு புத்தகத்தை எழுதியுள்ளனர். கற்றல் பதிப்பகம் மற்றும் நிவேதிதா பதிப்பகம் இணைந்து இந்த நூல்களை பதிப்பித்தனர்.இதில் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சித்திரைப் பொன் செல்வன், அன்வர்தீன் குழுமத்தின் தலைவர் அன்வர்தீன் மற்றும் டாக்டர் காதர் ஜாதன் என பல அமீரக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நிகழ்வை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தனர். குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட அவர்களின் படைப்பு திறன் விடாமுயற்சி மற்றும் ஒத்துழைப்பை கௌரவிக்கும் விழாவாக அமைந்தது. கடல் கடந்து வரும் தலைமுறையினருக்கு மொழியை முன் நின்று எடுத்துக் கூறுவதே எங்கள் தலையாய கடமை என்றும் இதற்கு வழி வகுத்துக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் மற்றும் தமிழ் இணைய கல்விக்கழக இயக்குனர்களுக்கும் நன்றியும் , அமீரகத்தில் கற்றுக்கொள்ள முன்வந்த மாணவர்களுக்கும், அதை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும், உடன் பயணித்த ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் தலைவர் முனைவர் மு.ரா.ஸ்ரீ ரோகிணி நன்றி தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்