துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார்
துபாய்: துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்புடன் நடந்தது. ஜமாஅத் தலைவர் சுல்தான் செய்யது இப்ராஹிம், பொதுச்செயலாளர் முகமது அஸ்லம், பொருளாளர் முகமது அனஸ் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தது. எஸ். அமீனுதீன், ஜஹாங்கீர், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா