உள்ளூர் செய்திகள்

மஸ்கட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கு வரவேற்பு

மஸ்கட் : மஸ்கட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரி மணிஷ் குமார் குப்தா தலைமையிலான குழுவினர் ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டுக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். மஸ்கட்டில் இந்திய தூதர் அமித் நாரங் உடன் அந்த குழுவினர் சந்தித்து பேசினர். பின்னர் ஓமன் பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் மாநில மற்றும் சூரா கவுன்சிலின் பணிகளையும் பார்வையிட்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !