உள்ளூர் செய்திகள்

த்தர் தமிழர் சங்கம் வெள்ளி விழாவை முன்னிட்டு மகளிர் கொண்டாட்டம்

கத்தர் தமிழர் சங்கம் வெள்ளி விழாவை முன்னிட்டு மகளிர் கொண்டாட்டம்கத்தர் தமிழர் சங்கம் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மகளிருக்கான பிரத்யேக “மகளிர் கொண்டாட்டம்” நிகழ்ச்சியை 28 நவம்பர் 2025 அன்று தோஹா மாடர்ன் இந்தியன் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொண்டாடியது. பெண்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவும், அவர்களின் அன்றாட அலுவல்களிலிருந்து ஒரு மாற்றம் அளிக்கவும், அவர்களின் முகங்களில் புன்முறுவல் கொண்டு வரவும், இந்நிகழ்ச்சி முனைந்தது.இதில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் சிவப்பு (பவள பெண்கள் அணி), பச்சை (மரகத மல்லிகை அணி), நீலம் (வைர ராணிகள் அணி) மற்றும் ஊதா (முத்து மணிகள் அணி) என 4 அணிகளாக பிரிக்கப்பட்டு கயிறு இழுத்தல், எலுமிச்சை கரண்டி ஓட்டம், வளையல் கம்பி, குப்பியில் கம்பி போடுதல், சுற்று வட்ட போட்டி, டிராகன் பலூன் போன்ற விளையாட்டுகளில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். முதல் நிலையை சிவப்பு அணியும் இரண்டாம் நிலையை பச்சை அணியும் கைப்பற்றின. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. வருகை தந்த அனைவரும் தம் கவலைகளை மறந்து தங்கள் தோழிகளுடன் உற்சாகமாக விளையாடியும், அளவளாவியும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சில் இந்திய தூதரக செயலாளர் (தகவல், கலை மற்றும் கல்வி) திருமதி. பிந்து நாயர் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியதுடன் வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இது போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படவேண்டும் என கூறினார், அனைவருக்கும் மதிய உணவு மற்றும் மாலை தேநீரும், தின்பண்டமும் வழங்கப்பட்டது. இறுதியில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இணை கலாச்சார செயலாளர் ராதிகா மற்றும் மனித நல செயலாளர் பிரம்மா ஆகியோரின் அர்ப்பணிப்பான உழைப்பால் இந்த நிகழ்வின் வெற்றி சாத்தியமானது. நிர்வாகக் குழு உறுப்பினர்கள், துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒரு வெற்றிகரமான நிகழ்வை உறுதி செய்வதில் நாள் முழுவதும் முக்கிய பங்கு வகித்தனர். துணைத் தலைவர் பரமசிவம் ரமேஷ் சிறப்பு உரை நிகழ்த்தினார். துணைக்குழு உறுப்பினர் திருமதி வசந்தி மனமார்ந்த நன்றி உரையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்