லெபனானில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெய்ரூட்: லெபனான் நாட்டின் ஜெஸ்ஸின் நகரில் 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமை வகித்தார். நகர மேயர் டேவிட் ஹலோ உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். யோகா பயிற்றுநர்கள் எளிய வகை ஆசனங்களை செய்து காண்பித்தனர். அதனை பின்பற்றி பலர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். - - நமது செய்தியாளர் காஹிலா