அஜ்மானில் யோகா
அஜ்மான் : அஜ்மான் விகாஸ் கலாச்சார மையத்தின் சார்பில் மெட்ரோபாலிடன் சர்வதேச பள்ளிக்கூடத்தில் 10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்திய தூதரகத்துடன் இணைந்து சிறப்பு யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய துணை தூதரக அதிகாரி தது மமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். யோகா பயிற்சியாளர்கள் பல்வேறு வகையான ஆசனங்களை செய்ய அதனை பின்பற்றி பொதுமக்களும், மாணவ, மாணவியரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். - நமது செய்தியாளர் காஹிலா