உள்ளூர் செய்திகள்

பாக்தாத்தில் யோகா நிகழ்ச்சி

பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் யோகா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யோகா பயிற்சியாளர்கள் எளிய வகை யோகா பயிற்சியினை மேற்கொள்ள அதனை பின்பற்றி இந்திய மற்றும் ஈராக் நாட்டினர் யோகாவை செய்தனர். யோகா உடல் நலனுக்கும், மன நலனுக்கும் உகந்தது என்பதை இதன் மூலம் உணர்ந்ததாக கூறினார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !