சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆடிவிழா
ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் மற்றும் திங்கள் கிழமைகளில் ஆலயங்களில் ஸ்ரீ அம்மனுக்குப் பல்வேறு அலங்காரங்கள் செய்து ஆராதனை - அபிஷேகம் - அன்னப் படையிலிட்டு வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாக மிளிரும். சிங்கப்பூர் ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத விழாக்களில் மண்டபம் நிறைய பக்தப் பெருமக்களிடையே ஸ்ரீ அம்பிகை எழுந்தருளிக் காட்சிகள் அளித்தமை மெய்சிலிர்க்க வைத்தன. ஆலய மேலாண்மைக் கழகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அருட்பிரசாதமும் அன்னப் பிரசாதமும் அருமையினும் அருமை.---நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.