சிங்கப்பூர் அரசின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்
சிங்கப்பூர் : சிங்கப்பூர் அரசின் கல்வித்துறை அமைச்சகத்தில் பயிற்சி ஆசிரியராக இப்ராஹிம் அஷ்ரப் அலி பணிபுரிந்து வருகிறார்.இவர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.இவர் சிறப்பான முறையில் பணிபுரிந்து வருவதற்காக அந்த அரசின் சிறந்த பயிற்சி ஆசிரியர்என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.விருது பெற்ற அவருக்கு சிங்கப்பூர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்சங்க தலைவர் முனைவர் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.--- நமது செய்தியாளர் காஹிலா.