பிட்ஸ்பர்க் நகரில் பகவத் கீதா ஜெயந்தி கொண்டாட்டம்
சமஸ்கிருத பாரதி பிட்ஸ்பர்க் கிளை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து பகவத் கீதா ஜெயந்தி தினத்தை ஸ்ரீமத் பகவத் கீதா ஸ்லோகங்களை பாராயணம் செய்தும், கீதா வகுப்புகள் நடத்தியும் கொண்டாடினர். மேலும் மாணவர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் சமஸ்கிருத மொழியில் வடிவமைத்த கதைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த விழாவில் சமஸ்கிருத பாரதி பிட்ஸ்பர்க் கிளையில் பயிலும் மாணவச் செல்வங்கள் மிக்க உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சி சமஸ்கிருதம் பாரதத்தில் மட்டுமல்லாது பூலோகம் முழுவதிலும் படிக்கப்படும் விருப்ப மொழியாக விரைவில் மாறும் என்ற நம்பிக்கையுடன் இனிதே நிறைவடைந்தது. - நமது செய்தியாளர் ஜெயஸ்ரீ