உள்ளூர் செய்திகள்

வாசிங்டனில் தேசிய விடுதலை தின அணிவகுப்பில் இந்தியர்களின் கலாச்சார பங்கேற்பு

அமெரிக்காவின் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய விடுதலை தின அணிவகுப்பு வாசிங்டன் டிசியில் சிறப்பாக நடைபெற்ற தேசிய விடுதலை தின அணிவகுப்பில் இந்தியர்களின் கலாச்சார பங்கேற்பு சிறப்பு ஈர்ப்பாக இருந்தது. அணிவகுப்பு Constitution Avenue வழியாக, 7வது வீதியிலிருந்து 17வது வீதி வரை விமரிசையாக நடைபெற்றது. Marching Bands, Fife and Drum Corps, அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள், படைத்துறை குழுக்கள் மேலும் பல கலாச்சார குழுக்கள் இதில் பங்கேற்றன. இந்த நிகழ்வில் இந்தியர்கள் வழங்கிய கலாச்சார நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்தியத் தேசியக் கொடியுடன், பாரம்பரிய உடைகள் அணிந்த குழுவினர் இந்திய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள். தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி மற்றும் பிற இந்திய மொழிக் குழுக்கள் இந்தியாவின் கலாச்சார செழுமையைப் பிரதிபலித்தன. என் பிள்ளைகளும், என் நண்பர்களின் பிள்ளைகளும் இந்த வாகனத்தில் நடனமாடினர் என்பதை நான் பெருமையுடன் கூற விரும்புகிறேன். இது நம்மை நம் கலாச்சாரத்துடன் இணைக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான தருணமாக இருந்தது. பரதநாட்டியம், பாலிவுட் நடனங்கள், மற்றும் தாயகம் பற்றிய எண்ணங்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகள் வாசிங்டனில் உள்ள மக்களின் பாராட்டைப் பெற்றன. 'இந்திய கலாச்சாரத்தில் காணும் வண்ணமும் ஒற்றுமையும் இந்த அணிவகுப்பில் மிளிர்ந்தது,' என ஒரு பார்வையாளர் தெரிவித்தார். இந்த அணிவகுப்பு வெளிநாட்டில் வாழும் இந்தியச் சமூகத்தின் ஒற்றுமை, பண்பாட்டுப் பெருமை மற்றும் பங்களிப்பை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கிய மேடையாக அமைந்தது. - நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்