உள்ளூர் செய்திகள்

FeIFF: வட அமெரிக்காவில் தமிழ் சினிமாவிற்கான ஒரு துணிச்சலான தொடக்கம்!

இந்த வருடம், 38-வது பேரவையின் தமிழ் மாநாட்டில் FeTNA International Film Festival (FeIFF) புதிய அடையாளம் கொள்கிறது— ஒரு சிறிய தொடக்கம், ஆனால் வியக்கத்தக்க கனவுகளுடன்! உங்கள் திரைப்படம் இந்த பட்டியலில் இடம்பெறுமா? தமிழ் படைப்பாளிகளின் திறமையை அரங்கேற்ற ஓர் அறிய வாய்ப்பு. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தமிழ் திரைப்படக் கலைஞர்கள் இந்த அற்புத வாய்ப்பைப் பயன்படுத்தலாம். உங்கள் படைப்பை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகைகளில் ஏதாவது ஒன்றில் அனுப்பலாம். போட்டிப் பிரிவுகள் - குறும்பட பிரிவு: 2 முதல் 40 நிமிடங்கள் வரை. - முழுநீள திரைப்படம்:40 நிமிடங்களுக்கு மேல். தகுதிகள் - 2010க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட படமாக இருக்க வேண்டும். - தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். - இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் வட அமெரிக்காவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது தொடர்புடையவராக இருக்க வேண்டும். விருதுகள் - சிறந்த குறும்படம் - (2 முதல் 40 நிமிடங்கள்) - வட அமெரிக்காவைச் சேர்ந்த சிறந்த தமிழ் தயாரிப்பாளர் - (40 நிமிடங்களுக்குமேல்) பாராட்டுகள் & பரிசுகள் - சிறந்த 5 குறும்படங்கள் விழாவில் திரையிடப்படும் - குறும்படம் முதல் பரிசு: $1200 ரொக்கம் மற்றும் தனிக் கவனம். - முழுநீளத் திரைப்படம் முதல் பரிசு: $1200 ரொக்கம் மற்றும் தனிக் கவனம். உங்கள் படைப்பை உலகறிய செய்யும் சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம்! மேலும் விபரங்களுக்கு: https பேரவையின் விழாக் குழு உங்களை அழைக்கிறது!fetna-convention.org - நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்