நவராத்திரி கொண்டாட்டம் அமெரிக்காவில்
பிரபஞ்சம் முழுவதும் பரபிரம்மம் என நம்புவோருக்கு அனைத்து சக்திகளும் தன்னாலே வழி கொடுக்கும். எங்கிருந்தால் என்ன, நம் மண்ணின் வேரை மறக்காமல் பசுமையாய் வைத்திருந்தாலே போதும். இந்தியராய் பிறந்த நாம் வருடம் முழுதும் பண்டிகைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவேயில்லை அல்லவா? கடல் கடந்து வேலை நிமித்தம் வந்து குடியேறி இருந்தாலும் விருந்தும் மருந்துமாய் அவ்விழா நாட்களை நாம் விடாது கொண்டாட வேண்டும். பாருங்கள், அமெரிக்காவில் அமர்க்களமாய் இவர்கள் நவராத்திரியை சீரும் சிறப்புமாக கொண்டாடியிருக்கிறார்கள்! - நமது செய்தியாளர் ஷீலா ரமணன்