sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

மகரம்

/

மகரம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

மாத ராசி பலன் : மகரம்
10 ஏப் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மகரம்

மகரம்

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்
நினைத்ததை சாதிப்பதற்காக தொடர்ந்து போராடிவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். ஆத்ம காரகனும் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியுமான சூரியன், சுக ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அனைத்திலும் போராட்டமான நிலை இருக்கும் என்றாலும், உங்களுக்கு சுகம் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு அதிபதியான செவ்வாய் மே 10 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்க முடியும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். தயங்கி தயங்கி ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்டு பின்னடைவை சந்தித்து வந்த நிலைமாறும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். நீண்டநாள் கனவுகள் இப்போது நனவாகும். சொந்த வீடு, வியாபாரம் செய்வதற்கு சொந்த இடம் என்று உங்கள் நிலை உயரும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் கேது, சத்ரு ரோக ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகளும் தொல்லைகளும் இருக்கும். உடல் நிலையிலும் அவ்வப்போது ஏதாகிலும் பிரச்னைகள் தலைக்காட்டும் என்பதால் அனைத்திலும் நிதானமாக இருப்பது நல்லது. விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 26.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 19, 28. மே 1, 8, 10.

பரிகாரம்: திருபுல்லாணி ஆதி ஜெகந்நாதரை வழிபட வேண்டிய காரியம் நடந்தேறும்.

திருவோணம்
உயர்வை நோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் சனி பகவானால் போராட்டங்கள், யாவும் முடிவிற்குவரும். தொடர்ந்து ஒவ்வொன்றிலும் தடைகளையே சந்தித்து வந்தவர்கள் இனி சாதித்துக் காட்டுவீர்கள். ராஜநடை போடுவீர்கள். கடந்தகால அனுபவங்களை எல்லாம் படிப்பினையாக கொண்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் எதுவெல்லாம் உங்கள் கனவாகவும் லட்சியமாகவும் இருந்ததோ அவையெல்லாம் இனி நனவாக ஆரம்பிக்கும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்களும், ஏளனம் செய்தவர்களும், கடுமையாக விமர்சித்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தேவையான ஆர்டர் கிடைக்காமல், பணியாளர்கள் இல்லாமல் மூடப்பட்ட தொழிற்கூடங்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் ஈடுபட்டுள்ளவர்களின் செல்வாக்கு உயரும். ஏப். 23 முதல் உங்கள் பாக்யாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்கும். சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வதுபோல் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். புதிய சொத்து, வாகனம் என்ற கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 26, 27.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 20, 29. மே 2, 8, 11.

பரிகாரம்: அர்த்தநாரீசுவரரை வழிபட வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

அவிட்டம் 1, 2 ம் பாதம்
முயற்சியில் தடையை சந்தித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். மே 10 வரை உங்கள் ராசிக்கு லாபாதிபதியான செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எந்தவொரு வேலையிலும் துணிச்சலாக ஈடுபட்டு அதில் வெற்றி அடைய முடியும். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் எல்லாம் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்திலும் சந்தோஷமான நிலை இருக்கும். ஏப். 20 முதல் உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். பொன் பொருள் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சகாய ஸ்தானாதிபதி குரு, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் ஜீவன, விரய, குடும்ப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விரய செலவுகள் குறையும். வெளியூர் பயணங்கள் வழியே ஆதாயம் ஏற்படும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நீண்ட நாள் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பின் காரணமாகவும், பொறுப்பு அதிகரிப்பதாலும் உடலில் சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மையாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.
சந்திராஷ்டமம்: ஏப். 27.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 18, 26. மே 8, 9.

பரிகாரம்: தேவிபட்டினம் நவபாஷான நவகிரகங்களை வழிபட வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us