மாத ராசி பலன்
மாத ராசி பலன் : மகரம்
13 ஜூன் 2026
முந்தைய மாத ராசி பலன்

மகரம்
மகரம்
உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்
செல்வாக்கோடு வாழ வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகளை லாபமாக்குவார். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த
இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் துறையில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வியாபாரம் தொழிலில் போட்டி பிரச்னை சங்கடம் என்றிருந்த நிலைமாறும். வியாபாரம் விருத்தியாகும். வழக்கு விவகாரத்தால் சங்கடங்களை சந்தித்து வந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலைக் கிடைக்கும். பெரியோர் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும். ஜூலை 6 முதல் சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். இக்காலம் உங்கள் செல்வாக்கு உயர்கின்ற காலமாக இருப்பதால் அனைத்திலும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம். அஷ்டம ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும் மருத்துவ செலவு ஏற்படும் என்றாலும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். விவசாயிகள் விளைச்சல்மீது கவனமாக இருப்பது அவசியம் மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 19.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 26, 28. ஜூலை 1, 8, 10.
பரிகாரம்: தில்லை நடராஜரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
திருவோணம்
எந்த நிலையில் இருந்தாலும் உயர்வை மட்டுமே நோக்கமாக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரை உங்களுக்கிருந்த பிரச்னைகள் விலகும். வம்பு வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். வாடகை இடத்தில் தொழில் செய்து வருபவர்களுக்கு சொந்த இடம் அமையும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவும் எதிர்பார்த்த பொறுப்பும் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும் என்றாலும், குடும்ப ஸ்தானத்தில் ராகு அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சலசலப்புகள் இருந்து கொண்டிருக்கும். எதிரிகளால் மறைமுகத் தொல்லை ஏற்படும். மனம் குழப்பம் அடையும் என்பதால் அனைத்திலும் நிதானமாக நடந்து கொள்வதும் கவனமாக செயல்படுவதும் உங்களைப் பாதுகாக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு இதுவரை இருந்த சங்கடம் நீங்கும். பொருளாதார நிலை உயரும் விவசாயிகளுக்கு மனம் குழப்பம் அடையும். எதிர்பார்ப்பு இடுபறியாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதும் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதும் நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 20.
அதிர்ஷ்ட நாள்: ஜூன். 17, 26, 29. ஜூலை 2, 8, 11.
பரிகாரம்: வக்ர காளி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்
நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் செவ்வாய் ஜூன் 19 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். ராசிநாதன் சனி பகவான் சகாய ஸ்தானத்தில் குருப்பார்வையுடன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மற்றவர்கள் முடியாது என்று கைவிட்ட வேலைகளையும் எடுத்து லாபம் காண்பீர்கள். உங்கள் பாக்யாதிபதி புதன் ஜூலை 8 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவு செய்வதற்காக வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடமே வந்து சரண் அடையும் நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடு செல்ல எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபம்தரும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வயதானவர்களுக்கு உடல்நிலை சீராகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 21.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27. ஜூலை 8, 9.
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.