தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/மாத ராசி பலன்/மகரம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

மாத ராசி பலன் : மகரம்
16 ஜூலை 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மகரம்

மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்

பகைவருக்கும் அருளக்கூடிய உள்ளம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆத்ம காரகன் சூரியனால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். உங்களிடம் இருந்த சோர்வு நீங்கி சுறு சுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு வேலைபளு அதிகரிக்கும். செய்து வரும் தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி இந்த நேரத்தில் எந்தவிதமான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம்.  அஷ்டம ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் அவ்வப்போது உடல்நிலையில் ஏதேனும் சங்கடங்கள் தோன்றும் இல்லையெனில் பொருளாதார ரீதியாக சிலருக்கு ஏமாற்றங்கள் உண்டாகும். கொடுத்து வைத்த பணம் கைக்கு வராமல் மனதில் சங்கடம் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் நெருக்கடிகள் பிரச்சனைகள் என்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவை. பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நன்மையளிக்கும். புதிவர்களிடம் குடும்ப விவகாரங்கள் பற்றி விவாதிக்கவும் பேசவும் வேண்டாம். அது உங்களுக்கே எதிராக மாறும். சிலர் அவப்பெயரையும் சந்திக்க வேண்டிவரும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 17. ஆக. 13.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 26, 28. ஆக. 1, 8, 10, 17.

பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

திருவோணம்

எதிர்காலத்தை நினைத்து அதற்கேற்ப செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும். நல்ல முறையில் நடந்து வந்த வேலைகளிலும் தடை தாமதம் என்ற நிலை உருவாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவானும் ஆக. 9 வரை அஸ்தமனம் ஆகியிருப்பதால் நடுக்காட்டில் விட்டதுபோல் உங்கள் நிலைமாறும். செயல்களில் கவனம் குறையும். திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாக வேண்டிவரும். வியாபாரம் தொழிலில் நெருக்கடிகளும் பிரச்சனைகளும் உண்டாகும். போட்டி அதிகரிக்கும். வரவு செலவில் இழுபறியான நிலை இருக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும் என்றாலும் ஆக. 9 முதல் குரு நேர்கதியில் சஞ்சரிப்பதால் நிலைமை சீராகும். வியாபாரம் தொழில் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். வரவேண்டிய பணம்வரும். சேமிப்பு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு கூடும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். உடல் நிலையில் அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும் என்றாலும், மாதத்தின் பிற்பகுதியில் அனைத்திலிருந்தும் விடுபட முடியும். குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதியில் ஆதாய நிலை இருக்கும். கையில் பணம் புழங்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 17, 18. ஆக. 14.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 26, 29. ஆக. 2, 8, 11, 17.

பரிகாரம்: பண்ணாரி மாரியம்மனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

அவிட்டம் 1, 2 ம் பாதம்

தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். மாதத்தின் முற்பகுதியில் தைரிய வீரிய காரகன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற வருமானம் இல்லை என்ற நிலை இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை ஏற்படும். மனம் குழப்பம் அடையும் என்றாலும், ஆக. 2 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலையை முடிக்கும் அளவிற்கு ஆற்றல் உண்டாகும். உடன் பணி புரிபவர்களுடன் இணக்கமான நிலை உண்டாகும். உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உடல் நிலையில் தோன்றிய சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். ஜூலை 31 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். நிதிநிலை உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக புதிய முதலீடு மேற்கொள்வீர்கள். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பொன் பொருள் சேரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். சிலர் குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில்  இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றமும் அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கையில் பணம் புரளும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 18, 19. ஆக. 15.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 26, 27. ஆக. 8, 9, 17.

பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us