போர்ப்ஸ் பத்திரிகை அட்டையில் நயன்தாரா
ADDED : 1464 days ago
ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா 2வது படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்து ஆச்சர்யப்டுத்தினார். அதன் பின்னர் சுமார் 20 ஆண்டுகளாக தமிழின் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரசிகர்கள் அன்போடு இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் நயன்தாரா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நயன்தாராவுக்கு, புதிய கவுரவம் ஒன்றை சர்வதேச அளவிலான போர்ப்ஸ் பத்திரிக்கை அளித்துள்ளது. அது என்னவென்றால், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த பத்திரிக்கையில் இடம்பெறுவது எளிதானதல்ல. ஆனால் அந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நயன்தாராவின் ஸ்டைலான புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடிக்கும் சூப்பர் டூப்பர் நடிகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு தென்னிந்தியாவில் இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நடிகை நயன்தாராவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை நயன்தாராவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.