எனக்கும், சமந்தாவுக்கும் தொடர்பா? டிசைனர் விளக்கம்
ADDED : 1563 days ago
நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்து விட்டார். இந்த நிலையில் விவாகரத்துக்கான காரணம் இதுதான் என்ற பல தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. அதில் முக்கியமானது சமந்தாவுக்கும் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் இருந்த நெருக்கமான தொடர்பும் என்றும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சமந்தா தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர். நான் அவரை ஜிஜி என்று அழைப்பது அனைவருக்குமே தெரியும். ஜிஜி என்றால் சகோதரி என்று பொருள். அப்படி இருக்கும்போது எங்களை எப்படி ஒருவர் தொடர்புபடுத்திப் பேசமுடியும்?
எனக்கு நாக சைதன்யாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும். எனக்கும் சமந்தாவுக்குமான உறவுமுறை என்னவென்று அவருக்கும் தெரியும். சமந்தாவையும் என்னையும் பற்றி யாரும் அப்படி பேசவேண்டாம் என்று நாக சைதன்யா வாய்திறந்து பேசியிருக்கலாம். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் கூட அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இப்போது ரசிகர் என்ற போர்வையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மன வேதனையை தந்திருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறார்.