உடல்தானம் செய்த ரோபோ சங்கர்
ADDED : 1565 days ago
நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் நடிகர் என்பதை தாண்டி சமூக சேவகர். கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளின் முகாமிற்கு சென்று அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி வந்தார். இந்த நிலையில் அவர் உடல்தானம் செய்துள்ளார்.
ரோபோ சங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவரை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெறுவது ரோபோ சங்கரின் வழக்கம். இந்த நிலையில் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை அகர்வால் கண் மருத்துவமனையில் நடத்தினர். அதில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர் கமல்ஹாசனைப் பின்பற்றி தானும் முழு உடல் தானம் செய்தார்.
வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று அவரை நேரில் சந்தித்து முழு உடல் தானத்திற்காக சான்றிதழை காண்பிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.