கணவரின் கைகளில் தவழும் அறந்தாங்கி நிஷா! திருமணநாள் கொண்டாட்டம்
ADDED : 1567 days ago
மேடை பேச்சாளரான அறந்தாங்கி நிஷா விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் உலக தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார். சினிமா, சின்னத்திரை என அனைத்திலும் கலக்கி வரும் நிஷா, சினிமாவில் உச்சம் தொட்ட பெண் நகைச்சுவை நடிகர்களான மனோரமா, கோவை சரளா வரிசையில் பயணித்து வருகிறார். மற்ற நடிகர்கள் போலவே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிஷாவும் போட்டோஷூட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவின் திருமண நாளை குடும்பத்தினரும், நண்பர்களும் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்களை நிஷா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் கணவரை கட்டி அனைத்து சாய்ந்தபடி போஸ் கொடுத்துள்ள நிஷா, கவிதையுடன் திருமண நாள் வாழ்த்தை சொல்லிவிட்டு அதன் கீழே 'எனக்கு நானே சொல்லிக்கிறேன்'என காமெடியாக பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அதை பார்த்துவிட்டு 'எப்பவுமே நீங்க இப்படிதானா'? என்ற கேள்வியுடன் திருமணநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.