நண்பர் ஸ்ரீகாந்த் மறைவு வருத்தமளிக்கிறது - ரஜினி இரங்கல்
ADDED : 1505 days ago
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த்(82) சென்னையில் காலமானார். வெண்ணிறாடை படத்தில் அறிமுகமாகி எதிநீச்சல், தங்கப்பதக்கம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினி உடன் பைரவி, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார். இருவரும் சினிமாவில் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் இவரின் மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில், ‛‛என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்'' என பதிவிட்டுள்ளார் ரஜினி.