மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1423 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1423 days ago
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களுடன் அவ்வப்போது சாட்டிங் செய்து தன்னைப் பற்றியும் தன்னுடைய படங்களை பற்றியும் தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் அவர் சாட்டிங் செய்தபோது ஏன் கன்னட படத்தில் நீங்கள் நடிப்பதில்லை என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, தற்போது தெலுங்கில் இருந்து பாலிவுட்டிற்கு நடிக்க சென்றுவிட்டதால் அங்கேயும் இங்கேயும் போய் வரவே நேரம் சரியாக போய்விடுகிறது.. அது மட்டுமல்ல தமிழிலும் சில படங்களில் நடிக்க உள்ளேன்.. அப்படி பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நான் படங்கள் நடிக்க வேண்டுமென்றால் வருடத்திற்கு 565 நாட்கள் தேவை என தான் பிஸியாக இருப்பதை காமெடியாக கூறியுள்ளார் ராஷ்மிகா.
ராஷ்மிகா இப்படி விளையாட்டாக கூறினாலும் உண்மை நிலை வேறு. கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்கிற படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, அதன் பிறகு தெலுங்குக்கு சென்று கீதா கோவிந்தம் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்று விட்டார். பின்னர் கன்னடத்தில் யஜமான் மற்றும் பொகரு என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கிற்கு சென்ற பிறகு அவர் கன்னடத்தில் தான் நடித்த படத்தை முடித்துத்தர இழுத்தடித்தது, மற்றும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடனான திருமணம் நிச்சய முறிவு என பல விஷயங்கள் அவரை அங்கே செல்லவிடாமல் தடுத்தன.
தவிர தெலுங்கு, பாலிவுட் ஆகியவற்றில் கிடைக்கும் சம்பளம் கன்னட திரையுலகில் கிடைப்பதைவிட பல மடங்கு அதிகம். அதனால்தான் அவர் கன்னட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. எப்படிப் பார்த்தாலும் ஒரு நடிகை ஒரு படத்திற்கு குறைந்தபட்சம் 10 லிருந்து 15 நாள் கால் சீட்டு தான் ஒதுக்குவார்கள். அப்படியே ஒரு படத்திற்கு ஒரு மாதம் என வைத்துக் கொண்டாலும் ராஷ்மிகாவை பொறுத்தவரை வருடத்திற்கு பத்து படங்களில் நடிக்கலாமே என்கிறார்கள் ரசிகர்கள்.
1423 days ago
1423 days ago