உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்டர், அரண்மனை 3 - இரண்டு வாரங்களாக தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள்

டாக்டர், அரண்மனை 3 - இரண்டு வாரங்களாக தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள்

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்களை நோக்கி ரசிகர்கள் அதிகமாக வராமலே இருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் வந்தனர். 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றாலும் அதற்கே பல தியேட்டர்களில் பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. அது இந்த வாரமும் தொடர்வதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

அது மட்டுமல்ல நேற்று வெளியான 'அரண்மனை 3' படத்திற்கான விமர்சனங்கள் சரியாக இல்லை என்றாலும் அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் வருவது தியேட்டர்காரர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

நேற்று முதலே தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், தமிழக அரசு இன்னமும் 50 சதவீத அனுமதியையே தொடர்கிறது. தீபாவளிக்காவது 100 சதவீத அனுமதி கிடைக்கும் என திரையுலகத்தினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !