மீண்டும் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும சந்தோஷ் நாராயணன்
ADDED : 1486 days ago
தமிழில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்த குரு என்ற படத்திற்கு இசையமைத்து அங்கும் அறிமுகமானார். தற்போது தசரா என்ற பெயரில் நானி நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்கிறார். இது நானியின் 29ஆவது படமாகும்.
சமீபகாலமாக புதுவரவு டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் நானியின் இந்த படத்தையும் ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற புதியவர் இயக்குகிறார். இப்படம் தெலுங்கானாவில் உள்ள கொத்தகுடெம் நிலக்கரி சுரங்கங்களின் பின்னணி கதையில் உருவாகிறது. முதன்முதலாக இப்படத்தில் தெலுங்கானா பேச்சுவழக்கில் நடிக்கிறார் நானி.