ராம்சரணின் 16வது படம் அறிவிப்பு
ADDED : 1486 days ago
ஷங்கர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் ராம்சரண். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தை ஆர்சி-15 என்று அழைத்து வருகின்றனர். அவருடன் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் நேற்று தசரா பண்டிகையையொட்டி ராம்சரணின் 16ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கில் மல்லிராவா, ஜெர்சி போன்ற படங்களை இயக்கியுள்ள கவுதம் இயக்குகிறார். தற்போது ஷங்கர் படத்தில் நடித்து வரும் ராம்சரண், 2022ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து கவுதம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.