அண்ணாத்த சென்சார் தகவல் வெளியானது
ADDED : 1470 days ago
சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்டர், டீசர் என வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று அண்ணாத்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை பட நிறுவனம் டுவிட்டரில் அறிவித்துள்ளது. அதில் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இந்த தீபாவளி சரவெடிதான் என்றும் பதிவிட்டுள்ளனர்.