மீண்டும் நானிக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
ADDED : 1469 days ago
அண்ணாத்த, சாணிக்காயிதம் படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரிபாட்டா, சிரஞ்சீவியுடன் போலா சங்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது நானி நடிக்கும் தசரா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இதற்கு முன்பு 2017ல் நேனு லோக்கல் என்ற படத்தில் நானியுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் அதையடுத்து நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு இந்த தசரா படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். சமுத்திரகனி வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.