உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ப்ளாஷ்பேக்: எல்.ஐ.சி ஏஜெண்ட் டூ பிரபல நடிகை! கம்பம் மீனாவின் கதை

ப்ளாஷ்பேக்: எல்.ஐ.சி ஏஜெண்ட் டூ பிரபல நடிகை! கம்பம் மீனாவின் கதை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் கம்பம் மீனா. வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் பிரபலமான துணை நடிகையாக இன்று வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த கிராமத்து பெண்ணின் சாதனை பின்னணி என்ன?

நாச்சிமுத்து மீனா என்ற இயற்பெயர் கொண்ட மீனாவுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. அதன்பின் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். குடும்ப வறுமை காரணமாக எல்.ஐ.சி ஏஜெண்டாக பணி செய்ய ஆரம்பித்தார். தைரியமான பெண்ணாக வலம் வந்த அவர், அப்போதே சுற்று வட்டாரங்களில் பிரபலமான பெண்ணாக இருந்தார்.

இதற்கிடையில் இயக்குநர் பாரதிராஜா 'தெற்கத்திபொண்ணு' என்கிற சீரியலை தேனி மாவட்டத்தில் இயக்கி வந்தார். அப்போது மீனாவை சந்தித்த இயக்குநர் அவரை முதன் முதலாக அந்த சீரியலில் நடிக்க வைத்தார். கிராமத்து வட்டார மொழியில் பேசி நடிப்பில் கலக்கிய மீனாவுக்கு சின்னத்திரை ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. தொடர்ந்து போராடிய மீனா தனது திறமையால் வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார்.

இன்று கம்பம் மீனா என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் அறியப்படும் நாச்சிமுத்து மீனா இதுவரை தமிழில் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் நடுத்தர மக்களின் மனங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டார். பத்தாம் வகுப்பில் தந்தையை இழந்து இன்று விடாமுயற்சியுடன் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் கம்பம் மீனாவின் வாழ்க்கை பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !