மெட்டிஒலி நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்
ADDED : 1503 days ago
மெட்டிஒலி தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 40. திருமுருகன் இயக்கத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்ற உமா மகேஸ்வரி, பல மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று (அக்.,17) காலை வாந்தி எடுத்து மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.