மதுபான கடை இயக்குனரின் குரங்கு பெடல்
ADDED : 1452 days ago
கடந்த 2012ல் வெளியான 'மதுபான கடை' படம் மூலம் கோலிவுட்டில் கவனிக்கத்தக்க இயக்குநராக அறிமுகம் ஆனார் கமலக்கண்ணன். இந்தப் படத்தில் கதையே இல்லாமல் காட்சிகளை கொண்டு படத்தை வித்தியாசமாக கொடுத்திருந்தார். விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றுள்ள இப்படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'குரங்கு பெடல்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்தப் படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் படம் இயக்குநர் ராசி அழகப்பனின் சிறுகதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இதற்கு ஒளிப்பதிவாளராக சுமீ பாஸ்கரன், எடிட்டராக சிவாநந்தீஸ்வரன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.