விஷால் நடிக்க ஐந்து மொழிகளில் உருவாகும் “லத்தி”
ADDED : 1451 days ago
நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு “லத்தி” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது. ஏ.வினோத் குமார் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமானது.
விஷால் தற்போது, தீபாவளிக்கு வெளியாக உள்ள எனிமி படத்தின் தமிழ், தெலுங்கு டப்பிங் பணியில் தீவிரமாக உள்ளார். அதனைத்தொடர்ந்து வீரமே வாகைசூடும் படத்தின் இறுதி கட்ட பணிகளை கவனிக்க உள்ளார். அதன்பிறகு “லத்தி” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும். லத்தி படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.